ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?
வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை ஆகும். இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது.
உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களும் பாடி பில்டிங்கில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களும் ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் முயற்சிக்கு பெரும் பலம் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
வேர்க்கடலையில் மிகவும் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளது. இது ஜீரண சக்தியை சரி தெரிகிறது. அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற அனைத்து உபாதைகளை சரி செய்கிறது.
இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த வேர்கடலையானது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது என்று கூறுகின்றனர். மாரடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து இது நம்மை காக்கும் என்று கூறுகின்றனர்.
இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆனது உடலில் வளரும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது. உடலிலுள்ள பல செல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். அந்த பாதிப்பு உள்ளான செல்களை வேர்க்கடலையில் உள்ள சத்தானது அழித்து விடுகிறது.