Peanut Ladoo: உடலிற்கு வலுசேர்க்கும் சத்தான வேர்க்கடலை லட்டு
மாறிவரும் இந்த காலகட்டத்தில் அனைவரும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
அந்தவகையில், எடை இழப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை ஏராளமான நன்மைகள் வேர்க்கடலையில் நிறைந்துள்ளது.
வெறும் 3 பொருட்களை வைத்து உடலிற்கு வலுசேர்க்கும் சத்தான வேர்க்கடலை லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- வேர்க்கடை- 1 கப்
- வெல்லம்- ½ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு வாணல் வைத்து வேர்க்கடைலை மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு ஆறவைத்து தோலை நீக்கிக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை சேர்த்து ஒன்றும் பாதியாக விட்டு விட்டு அரைக்கவும்.
பின்னர் இதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து விட்டு விட்டு அரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உருண்டையாக பிடித்தால் சுவையான வேர்க்கடலை லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        