உடலுக்கு சத்தான வேர்க்கடலை உருண்டை.., இலகுவாக எப்படி செய்வது?
வேர்க்கடலை லட்டுவை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிட்டு வர உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்கும்.
அந்தவகையில், வீட்டிலேயே சத்தான வேர்க்கடலை உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை- 1 கப்
- வெல்லம்- ¼ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- தேவையான அளவு
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கடாயில் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
இதற்கு பிறகு வறுத்த வேர்க்கடலை சூடு ஆறியதும், தோல்களை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வேர்க்கடலைகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இதற்கு பிறகு அதில் வெல்லம் சேர்த்து இடைவெளி விட்டுவிட்டு அரைக்கவும்.
இதற்கடுத்து ஒரு தட்டில் அரைத்த கலவையை சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக நெய் சேர்த்து நன்கு பிணைந்து உருண்டையாக பிடித்தால் சுவையான சத்தான வேர்க்கடலை உருண்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |