பிரித்தானியாவில் துயரம்: நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு
Pedestrian dies after ambulance hit in sunderland: பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பிரித்தானியாவின் சண்டர்லேண்ட் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சண்டர்லேண்ட்
இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்ட் பகுதியில், அதிகாலை 2 மணியளவில் A19 சாலையில் வடக்கு நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுள்ளது.
நீல நிற விளக்குகளை எரிய விடாமல் சென்ற அந்த ஆம்புலன்ஸ், சாலையில் சென்ற ஒருவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் 30 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே சமயம் ஆம்புலன்ஸில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மரணத்தை உறுதிசெய்து அறிக்கை
உயிரிழந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு ஆம்புலன்ஸ் சேவை அவரது மரணத்தை உறுதிசெய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Northumbria காவல்துறையின் சாலைப் போக்குவரத்துக் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
