கனடாவில் அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற 24 வயதான இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கனடாவில் அதிகாலையில் வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
ஹாலிபக்ஸில் தான் இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அன்றைய தினம் அதிகாலை 3.35 மணிக்கு 24 வயதான இளம்பெண் மீது வாகனம் மோதியதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த நிலையில் படுகாயமடைந்த அப்பெண் உயிரிழந்தது தெரியவந்தது.
அவர் மீது மோதிய வாகனத்தை ஓட்டிய நபருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. வாகனத்தை ஓட்டியவர் மது போதையில் இருந்து அது இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் சாட்சிகள் யாரேனும் இருந்தால் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.