கனடாவில் அதிவேகமாக லொறி மோதிய கோர விபத்து! உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதசாரிகள்..ட்ரூடோவின் பதிவு
கனடாவின் ஆம்கியூவில் லொறி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் பாதசாரிகள் பலர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சாலை விபத்து
கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆம்கியூ நகரில், பிற்பகல் மூன்று மணியளவில் அதிவேகமாக வந்த லொறி ஒன்று பாதசாரிகள் மீது பலமாக மோதியது.
இதில் பலர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
@CBC
லொறியை இயக்கிய சாரதியை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
@Radio-Canada
பிரதமரின் பதிவு
இந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் இதயம் இன்று கியூபெக்கின் ஆம்கியூ மக்களுடன் உள்ளது. நடந்த சோகமான நிகழ்வுகளைப் பற்றி மேலும் அறியும்போது, பாதிக்கப்பட்ட அனைவரையும் என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன். முதலில் பதிலளித்தவர்களுக்கு: விரைவாகவும், தைரியமாகவும், தொழில் ரீதியாகவும் செயல்பட்டதற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
My heart is with the people of Amqui, Quebec today. As we learn more about the tragic events that have taken place, I’m keeping everyone affected in my thoughts. And to the first responders: Thank you for acting quickly, courageously, and professionally.
— Justin Trudeau (@JustinTrudeau) March 13, 2023
@Chris Wattie/Reuters