அரசமரத்தை சுற்றி வழிபடுவது ஏன்? ராஜயோகத்தை அருளும் என்பது உண்மையா?
பண்டைய காலம் தொட்டே அரச மரத்தை வழிபடும் பழக்கம் இருந்து வருகிறது, மரங்களின் அரசன் என போற்றப்படும் அரச மரத்தில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.
தேவலோகத்து மரம், வேண்டிய வரத்தை அருளும் மரம் என்றெல்லாம் புகழாரம் சூட்டுகின்றனர்.
ராஜவிருட்சம் என்றழைக்கப்படும் இம்மரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிகின்றனராம்.
இந்துக்களும், புத்தர்களுக்கும் புனித மரமான அரச மரத்தின் அடியில் தான் புத்தர் ஞானம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
காலை மாலை என இருவேளையும் மரத்தை சுற்றி வந்தால் நோய்கள் குணமாகும் எனவும் நம்பப்படுகிறது.
பிரம்ம முகூர்த்தத்தில் ஒரு செம்பு தண்ணீரை ஊற்றிவிட்டு 11 முறை வலம்வந்தால் நினைத்த ஆசைகள் நிறைவேறும், உச்சிவெயிலுக்கு பின்னரும், இரவிலும் இதை செய்யக்கூடாது.
இதற்கு காரணம் ஆக்சிஜனை அரச மரம் அதிகளவில் வெளியிடுவது தான், இதனை சுவாசித்தால் உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாவதுடன் ஆரோக்கியம் மேம்படும்.
இதில் சுரக்கும் ஒரு வகை அமிலமானது, புத்திக்கூர்மையை வளரச்செய்யும் என சமீபத்திய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இம்மரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின்னர் தேன் கலந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் தாதுக விருத்தியடையும், பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகளும் நீங்கி குழந்தை பேறு கிடைக்கப்பெறும்.
என்ன நாளில் என்ன வரம்?
எந்த நாளில் அரச மரத்தை சுற்றி வந்தால் என்ன வரம் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
- திங்கட்கிழமை- சகல சௌபாக்கியங்களை பெறலாம்.
- செவ்வாய்க்கிழமை- பதவி உயர்வு, காரிய சித்தி உண்டாகும்.
- புதன் கிழமை- தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
- வியாழக்கிழமை- பிள்ளைகளுக்கு கல்வி அறிவு பெருகும்.
- வெள்ளிக்கிழமை- கடன் பிரச்சனைகள் தீரும்.
- சனிக்கிழமை- நோய்கள் குணமாகும்.
- ஞாயிற்றுக்கிழமை- பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும்.
அரச இலையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் கஷ்டங்கள் அகலும்,
திங்களன்று பிறந்தவர்கள் - 3 அரச இலைகளை வைத்து, அதன்மேல் 3 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.
செவ்வாயன்று பிறந்தவர்கள்- 2 அரச இலைகளை வைத்து, 2 மண் அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.
புதனன்று பிறந்தவர்கள்- 3 அரச இலைகளை வைத்து, 3 மண் அகல் தீபங்கள் ஏற்றவேண்டும்.
வியாழன்று பிறந்தவர்கள்- 5 அரச இலைகளை வைத்து, 5 மண் அகல் தீபம் ஏற்ற வேண்டும்.
வெள்ளியன்று பிறந்தவர்கள்- 6 அரச இலைகளை வைத்து, 6 மண் அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.
சனிக்கிழமை பிறந்தவர்கள்- 9 அரச இலைகளை வைத்து, 9 மண் அகல் தீபங்கள் ஏற்றவேண்டும்.
ஞாயிறன்று பிறந்தவர்கள்- 12 அரச இலைகளை வைத்து, 12 மண் அகல் தீபமேற்ற வேண்டும்.