கால்பந்து ஜாம்பவானின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மெஸ்சி! உருக்கத்துடன் கூறிய மகள்
உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா வெற்றி பெற வேண்டும் என விரும்பிய தனது தந்தையின் ஆசையை மெஸ்சி நிறைவேற்றினார் என பீலேவின் மகள் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கால்பந்து ஜாம்பவான்
கால்பந்து உலகின் கடவுளாக பார்க்கப்படுபவர் பிரேசில் வீரர் பீலே. வயது மூப்பினால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி காலமானார்.
அவர் இறப்பதற்கு முன்பு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை மருத்துவமனையில் இருந்தவாறே கண்டு களித்தார்.
கடைசி ஆசை
பிரேசில் வெற்றி பெற வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது அணி வெளியேறியது. எனினும், தென் அமெரிக்காவுக்கு கோப்பை திரும்ப வர வேண்டும் என்றும், அர்ஜென்டினா வெற்றி பெற வேண்டும் என்றும் பீலே விரும்பினார்.
@Instagram/@flavia_kurtz_fisioterapia
அத்துடன் மெஸ்சி வென்றாக வேண்டும் என்றும் அவர் கூறினார். பீலேவின் விருப்பப்படியே அர்ஜென்டினா கோப்பையை வென்றது. இந்த தகவலை அவரது மகள் கெலி நாசிமெண்டோ தற்போது கூறியுள்ளார்.
தனது தந்தை இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கவில்லை என்றாலும், மெஸ்சி கோப்பையை வென்றதை அறிந்து அவர் மகிழ்ச்சியடைந்ததாக கெலி தெரிவித்துள்ளார்.
@REUTERS