50 பைசாவை திருப்பி தராத Post Office -க்கு அபராதம் இவ்வளவா? நீதிமன்றம் உத்தரவு
50 பைசாவை திருப்பி தராத அஞ்சல் அலுவலகத்திற்கு அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதம் விதிப்பு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3 -ம் திகதி என்று சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் பொழிச்சலூர் தபால் நிலையத்தில் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்புதற்காக சென்றுள்ளார்.
அங்கு, அதற்கான செலவு ரூ.29.50 பைசா ஆகியுள்ளது. அப்போது அந்த நேரத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு நினைத்துள்ளார்.
ஆனால், பணம் செலுத்தும் Pay U யுபிஐ சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 30 ரூபாயை அலுவலரிடம் கொடுத்து மீதி சில்லறை 50 பைசாவை கேட்டுள்ளார்.
அதற்கு, உங்களுக்கான தபால் செலவு ரவுண்டாக ரூ.30 என்று கூறி மீதி சில்லறை தர மறுத்துள்ளார். இதனால், அந்த நபர் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார்.
பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரூ.50 பைசாவை இழந்த நபருக்கு நஷ்டஈடாக ரூ.15,000 வழங்கும்படி தபால் அலுவலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |