உடற்பயிற்சி கூடத்தில் நுழைய தடை: பயங்கர செயலில் ஈடுபட்ட இளைஞர்..அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில் நுழைய தடை விதித்ததால், நபர் ஒருவர் ஊழியரை கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடற்பயிற்சி கூடத்தில் நுழையத் தடை
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞர் டேவியர் மாஸ்ஸி. இவர் Philadelphia-யில் இருந்து 30 நிமிட தொலைவில் உள்ள Cheltenham Township-யில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கட்டணம் செலுத்தாததால் உடற்பயிற்சி கூடத்தில் நுழைய மாஸ்ஸிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் உடற்பயிற்சி கூடத்தின் ஊழியருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பலமுறை கத்தியால்
ஒரு கட்டத்தில் மாஸ்ஸி ஊழியரை ஆத்திரத்தில் பலமுறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மீட்கப்பட்ட அந்த ஊழியர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும், Cedarbrook வணிக வளாகத்திற்கு உள்ளேயே வைத்து மாஸ்ஸியை பொலிஸார் கைது செய்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |