இராணுவ மருத்துவர் துஷ்பிரயோகம் செய்ததாக கூறிய 27 வயது பெண்: அம்பலமான அதிர்ச்சி உண்மை
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த இளம்பெண், பொய்யான துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன்வைத்ததால் சிறைத்தண்டனை பெற்றார்.
தானாக முன்வந்து ராஜினாமா
இராணுவ மருத்துவராக பணிபுரிந்த ஃபஹத் பர்வேஸ் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெரோனிகா ரோட்ரிக்ஸ் (27) என்ற இளம்பெண் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பர்வேஸ் இராணுவத்தில் தனது பதவியில் இருந்து தானாக முன்வந்து ராஜினாமா செய்தார்.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த வெரோனிகாவின் இந்த குற்றச்சாட்டு பொய் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது செல்போனில் காணப்பட்ட தகவல்தொடர்புகள், அவரது கூற்றுகளுக்கு முரணானவை என்பதை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும், அவர் மருத்துவருடன் உடலுறவு கொண்டதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
மற்றொரு முறை வெரோனிகா மருத்துவர் பர்வேஸுடன் உறவுகொண்ட வீடியோவை வேறொரு நபருக்கு அனுப்பியிருக்கிறார்.
அடையாளம் கண்ட புலனாய்வாளர்கள்
வெரோனிகா ஆண்களுடன் இதேபோன்ற சம்பவங்களைப் பதிவு செய்யும் ஒரு முறையை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டனர்.
இந்த நிலையில் தவறான செய்தி அனுப்புதல், தகவல் தொடர்புகளை இடைமறித்தல் மற்றும் இடைமறிக்கப்பட்ட தகவல் தொடர்புகளை வெளிப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 30 நாட்கள் சிறைத்தண்டனையும், கூடுதலாக 22 மாதங்கள் நன்னடத்தை தண்டனையும் விதிக்கப்பட்டார்.
மே மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் லெபனான் கவுண்டி ஜூரி மூலம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இந்த தண்டனையை அவர் எதிர்கொள்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |