எரிபொருள் நெருக்கடி..போர் எப்போது முடியும்? ட்ரம்ப்பிற்கு அவுஸ்திரேலியா அனுப்பிய செய்தி
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே தெரியும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
போர் எவ்வாறு முடிவுக்கு வரும்
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் போரினால் அவுஸ்திரேலியாவிலும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், போர் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பது குறித்து அமெரிக்காவிடம் இருந்து அதிக தெளிவு வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் போர் நோக்கங்களை தெளிவாக கோடிட்டு காட்டி, மோதலை முடிவுக்குக் கொண்டுவர உறுதியளிக்குமாறு ஜனாதிபதி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர்
அவரது இந்த அழைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) பேசியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் எரிபொருள் நெருக்கடியைக் குறிப்பிட்டு பேசிய வோங், "இந்தப் போரினால் மிகக் கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாகக் காட்டியுள்ள அறிகுறியை நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும், இந்தப் போர் நமது நாடு முழுவதும் உள்ள அவுஸ்திரேலியர்களுக்கும், குறிப்பாக எரிபொருள் நிரப்பும் இடங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் அறிவோம்.
இறுதியில், இது எப்போது முடிவுக்கு வரும் என்பதை அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே அறியும்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |