பியூனாக வேலை செய்த இளைஞர் மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற நெகிழ்ச்சி சம்பவம்
தேர்வு ஆணைய அலுவலகத்தில் பியூனாக வேலை செய்த இளைஞர் மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று உதவி ஆணையர் ஆகியுள்ளார்.
பியூன் வேலை
இந்திய மாநிலமான சத்தீஸ்கர், ராய்பூரில் உள்ள CGPSC அலுவலகத்தில் பணிபுரிந்த இளைஞர் சைலேந்திர குமார் பந்தே (29).
பட்டியலின விவசாய குடும்பத்தை சேர்ந்த சைலேந்திர குமார் பந்தே, கடந்த 7 மாதங்களாக பியூனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், ராய்ப்பூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்து தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்துள்ளார்.
இந்நிலையில், தனது ஐந்தாவது முயற்சியில் சத்தீஸ்கர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, இப்போது மாநில வரித்துறையில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட CGPSC-2023 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், பொதுப் பிரிவில் 73 வது ரேங்க் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவில் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.
இதுகுறித்து சைலேந்திர குமார் பந்தே கூறுகையில், "எனது பெற்றோர் என்னுடைய ஒவ்வொரு முடிவிலும் உறுதுணையாக இருந்தனர்" என்றார்.
தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்லாமல் அரசு தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இவர், குடும்பத்தின் சூழ்நிலை காரணமாகவே கடந்த மே மாதம் முதல் அரசு அலுவலகத்தில் பியூன் வேலை பார்த்து வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |