இளவரசர் பிலிப் மரணத்தை வைத்து இப்படியா செய்வது? கடும் கோபமடைந்த மக்கள்: சர்ச்சையில் பிரபல செய்தி ஊடகம்
இளவரசர் பிலிப் மரண செய்தி அறிவித்த சில நிமிடங்களிலே, பிரபல செய்தி ஊடகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டிருந்த செய்தி பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
பிரித்தானியாவே இன்று சோகத்தில் மூழ்கிய நாள் என்று கூறலாம், இளவரசர் பிலிப் மரணத்தால் எட்டு நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இளவரசர் பிலிப் மரண செய்தி வெளியான சில நிமிடங்களில், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மிகப் பெரிய பிரேக்கிங் செய்திக்காக எங்கள் சேனலுக்கு செல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த செய்தி ஊடகத்திற்கு டுவிட்டர் பக்கத்தில், 8.6 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். இதைக் கண்ட இணையவாசிகள், பலரும் தங்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
