பிரித்தானிய பிரதமர் வீட்டின் மீது ஏறிய நபர்கள் கைது: பின்னணி இதுதான்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குக்கு சொந்தமான வீட்டின் மீது ஏறிய நான்கு பேர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் வீட்டின் மீது ஏறிய நபர்கள்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குக்கு சொந்தமான வீடு ஒன்று இங்கிலாந்தின் Kirby Sigston என்னும் இடத்தில் உள்ளது. அந்த வீட்டி மீது நான்கு பேர் ஏறியதுடன், வீட்டை கருப்புத் துணியால் மறைக்கவும் செய்தார்கள்.
அவர்கள் Greenpeace என்னும் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். வட கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக கடல் படுகையில் துவாரமிடும் விடயத்துக்கு பிரதமர் ரிஷி ஆதரவளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே அவர்கள் இப்படி அவருடைய வீட்டின் மீது ஏறியுள்ளார்கள்.
அத்துடன், மேலும் இரண்டு பேர் ரிஷியின் வீட்டின் முன், ’ரிஷி சுனக், எண்ணெயால் வரும் இலாபமா, அல்லது எங்கள் எதிர்காலமா’ என்று எழுதப்பட்ட பேனருடன் நின்றிருந்தனர்.
Pic: Greenpeace
ஐந்து பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக, பிரதமர் வீட்டின்மீது ஏறிய நான்கு பேர் உட்பட, பொது இடத்தில் அமைதியைக் குலைத்த குற்றத்துக்காக மற்றொரு சமூக ஆர்வலரும் என மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்தபோது ரிஷி அந்த வீட்டில் இல்லை. அவர் விடுமுறைக்காக குடும்பத்துடன் கலிபோர்னியாவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர்கள் ஐந்து பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |