ஜேர்மனியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வருவாயில் பாதியை இதற்காகத்தான் செலவு செய்கிறார்கள்!
ஜேர்மனியில் வாழும் 15 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் தங்கள் வருவாயில் பாதியை வாடகை செலுத்துவதற்காகவே செலவிடுகிறார்களாம்.
பெடரல் புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ள தகவல் ஜேர்மனியில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தங்கள் வருவாயில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை வீட்டு வாடகைக்காக செலவிடுவதாக பெடரல் புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ளது.
3.1 மில்லியன் குடும்பங்கள், குறைந்தபட்சம் தங்கள் வருவாயில் 40 சதவிதத்தையும், 1.5 மில்லியன் குடும்பங்கள் தங்கள் வருவாயில் பாதியையும், வெறும் வாடகைக்காக மட்டும், அதாவது, மின்கட்டணம், வீட்டை வெப்பப்படுத்துவதற்கான கட்டணங்களை சேர்க்காமல், வாடகைக்காக மட்டுமே செலவிடுவதாக தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்த ஏஜன்சி