ட்ரம்ப் வரிவிதிப்பால் ஜேர்மன் நகரமொன்றையே காலி செய்யும் நிலையில் மக்கள்
ட்ரம்பின் கார்கள் மீதான வரிகள், ஜேர்மனி மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த உள்ள நிலையில், ஜேர்மன் நகரமொன்றின் மக்கள் ஊரை காலி செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
ஊரை காலி செய்யும் நிலையில் மக்கள்
கிழக்கு ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ளது Zwickau நகரம். அங்குள்ளவர்கள் இரத்தத்திலேயே கலந்துள்ளது கார் தயாரிப்பு.
120 ஆண்டுகளுக்கு முன் முதல் கார் அங்கு தயாரானது. ஆனால், இப்போது ட்ரம்பின் கார்கள் மீதான வரிவிதிப்பால் அந்நகரம் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.
கார்களைப் பொருத்தவரை அமெரிக்கா ஜேர்மனியின் முக்கிய வர்த்தகக் கூட்டாளர் நாடு.
2024ஆம் ஆண்டில் மட்டும் ஜேர்மனி அமெரிக்காவுக்கு 36.8 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
ஆக, ட்ரம்ப் கார்கள் மீது 25 சதவிகித வரிகள் விதிப்பாரானால், அது ஜேர்மன் கார் உற்பத்தியாளர்களை பெரிய அளவில் பாதிக்கும்.
ஜேர்மனியில் கார் தயாரித்து அதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டுமானால், அதற்கு 25 சதவிகித வரி செலுத்தவேண்டும்.
ஆகவே, வரிவிதிப்பைத் தவிர்க்க, ஜேர்மன் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கே சென்றுவிடக்கூடும்.
அப்படி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டால், ஜேர்மனியில் மக்கள் வேலை வாய்ப்பு இழக்கும் நிலை உருவாகும்.
ஆக, வேலை இல்லை என்றால், மக்கள் வேலைக்காக ஊரைக் காலி செய்துவிட்டு வேறு நகரங்களுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |