2025ஆம் ஆண்டில் வரலாறு காணாத எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கிய ஜேர்மனி
ஜேர்மனி, 2025ஆம் ஆண்டில், வரலாறு காணாத எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
வரலாறு காணாத அளவில்...
ஜேர்மனி, 2025ஆம் ஆண்டில், 309,852 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
அதாவது, 2024ஆம் ஆண்டின் மத்தியப்பகுதியில் ஜேர்மனி குடியுரிமை விதிகளை எளிதாக்கியதைத் தொடர்ந்து, முந்தைய ஆண்டைவிட, அதாவது, 2023ஆம் ஆண்டைவிட 46 சதவிகிதம் பேர் கூடுதலாக ஜேர்மன் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.

உண்மையில், 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2025ஆம் ஆண்டில் குடியுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை 6 சதவிகிதம்தான் அதிகம். 2024ஆம் ஆண்டில், 291,955 வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றார்கள்.
என்றாலும், 2025இல் 309,852 பேர் குடியுரிமை பெற்றுள்ளதே, இதுவரை வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றதில் மிக அதிக எண்ணிக்கை ஆகும்.
விடயம் என்னவென்றால், இன்னமும் Mecklenburg-Vorpommern மற்றும் Saxony-Anhalt மாகாணங்களில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை வெளியாகவில்லை.
அதேபோல, Lower Saxony, Saarland மற்றும் Schleswig-Holstein மாகாணங்களில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையும் முழுமையாக கிடைக்கவில்லை.
அப்படி அந்த எண்ணிக்கைகளும் சேரும்போது, 2025ஆம் ஆண்டில், குடியுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |