இந்த நாட்டு மக்கள் அகதிகளாக வருவதை வரவேற்கிறோம்... ஆதரவு தெரிவித்துள்ள ஜேர்மன் சேன்ஸலர்
ரஷ்ய அகதிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வரவேற்க ஆதரவு தெரிவிப்பதாக ஜேர்மன் சேன்ஸலர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசின் நடவடிக்கைகளை விரும்பாத ரஷ்ய நாட்டவர்களும் ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
ரஷ்ய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அகதிகளாக வருவதை வரவேற்பதாக ஜேர்மன் சேன்ஸலர் தெரிவித்துள்ளார்.
Nordic நாடுகள் மாநாட்டில் பேசிய ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், ரஷ்ய ஆட்சியாளர்களை விமர்சிப்போர் அங்கிருந்து தப்பியோடுவதை கடினமாக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
ரஷ்ய ஆட்சியாளர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ளதால், ரஷ்ய மக்கள் பலர் ரஷ்யாவிலிருந்து அகதிகளாக வெளியேறுவதை நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ள ஷோல்ஸ்,
Kay Nietfeld/dp a/picture alliance
அவர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள அவர், அவர்கள் ரஷ்யாவிலிருந்து தப்புவதை கடிமான ஒன்றாக ஆக்கிவிடக்கூடாது என்கிறார்.
ஆனால், ரஷ்ய எல்லையிலிருக்கும் நாடுகளான லிதுவேனியா மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகள் ஏற்கனவே ரஷ்யர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்திவிட்டன. பின்லாந்தும் ரஷ்யர்களுக்கு விசா வழங்க தடை விதிப்பதை ஆதரிக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ரஷ்ய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அகதிகளாக வருவதை வரவேற்பதாக ஜேர்மன் சேன்ஸலர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.