5,000 பேர்கள் வெளியேற்றம்... மொத்தமாக அழிந்த 200 வீடுகள்: வெளிவரும் பகீர் சம்பவம்
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் பற்றியெரியும் காட்டுத்தீயால் இதுவரை நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கன மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
ருய்டோசோ கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 200க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துள்ளது. சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில், 9.6 சதுர மைல் தொலைவுக்கு வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
அதிக மின் அழுத்த கம்பிகளால் நியூ மெக்சிகோ தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், குடியிருப்பு ஒன்றில், மொத்தமாக உடல் கருகிய நிலையில் வயதான தம்பதி ஒன்றின் சடலங்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, 4,500 பேர் குடியிருக்கும் பகுதியில் வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 60% பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.