40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இம்மாதம் முதலே தடுப்பூசி: பிரதமர் போரிஸ் ஜான்சன் பெருமிதம்!
பிரித்தானியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இந்த மாதத்தில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கடைசி தொகுதி தடுப்பூசி இன்னும் சில நாட்களில் வழங்கி முடிக்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் விரைவில் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
ரோல்அவுட்டின் தற்போதைய வீதத்தின் அடிப்படையில், ஒரு வாரத்திற்கு சராசரியாக 2.5 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.
தடுப்பூசி அளிக்கும் குழுக்கள் தற்போதைய வேகத்தைத் தொடர்ந்தால், மார்ச் மாத இறுதிக்குள் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதைக் காணலாம்.
அதற்கான முன்பதிவு செய்யும் பணியைத் தொடங்கவும் தடுப்பூசி குழு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் இதுவரை 20,000,000 மக்களுக்கு குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தடுப்பூசி அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் Matt Hancock நேற்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் "மிகப்பெரிய தேசிய சாதனை" என்று பெருமிதம் கொண்டார், அதே நேரத்தில் தடுப்பூசி திட்டத்துக்கு பணியாற்றிவரும் NHS, தன்னார்வலர்கள் மற்றும் ஆயுதப்படைகளைப் பாராட்டினார்.
ஜூலை இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்ற பிரதமர் போரிஸ் ஜான்சனின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிரிபார்க்கப்பருகிறது.