பணம் கொண்டு செல்லும் வேனை மடக்கிக் கொள்ளையடிக்கும் நபர்கள் சிக்கினர்: தண்டனை விவரம்
சுவிட்சர்லாந்தில், பணம் கொண்டு சென்ற வேனை மடக்கிக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் சிக்கிய நிலையில், அவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது சுவிஸ் நீதிமன்றம் ஒன்று.
தொடர்ந்த கொள்ளைச் சம்பவங்கள்
2017க்கும் 2019க்கும் இடையில், சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில், பிரான்சின் Lyonஐ மையமாகக் கொண்டு செயல்பட்ட கொள்ளையர்கள் சிலர், பணம் கொண்டு செல்லும் வேன்களை மடக்கிக் கொள்ளையடித்த சம்பவங்கள் பல தொடர்ந்து நடைபெற்ற விடயம் சுவிட்சர்லாந்தை பரபரப்படையச் செய்தது.
Vaud மாகாணம், வாகனங்களில் பணம் கொண்டு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தபிறகே இந்த கொள்ளைச் சம்பவங்கள் முடிவுக்குவந்தன.
பொலிஸ் போல நடித்துக் கொள்ளயடித்த நபர்கள்
2017ஆம் ஆண்டு, மே மாதம், ஜெனீவாவுக்கும் லாசேனுக்கும் இடையில், Nyon என்னுமிடத்தில், பணம் கொண்டுசென்றுகொண்டிருந்த வேன் ஒன்றை பொலிஸ் சீருடை அணிந்த ஆறுபேர் தடுத்து நிறுத்தினர்.
துப்பாக்கியைக் காட்டி, சாரதிகளை கட்டி வேனின் பின்பக்கத்தில் அடைத்த அவர்கள், வேனுடன் பிரான்சுக்குள் நுழைந்துள்ளனர். அந்த வேனில் 40 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புடைய கரன்சி நோட்டுகள் இருந்துள்ளன.
ஒன்பது மாதங்களாக சந்தேகத்துக்குரிய அந்த ஆறுபேரையும் பிரெஞ்சு பொலிசார் கண்காணித்துவந்த நிலையில், மீண்டும் பிரான்சிலுள்ள ஒரு பெரிய வீட்டில் அந்த ஆறு பேரும் கொள்ளையடிக்க, நான்கு மணி நேரத்த்துக்குள் பொலிசார் அவர்களை கைது செய்தனர்.
தண்டனை விவரம்
அந்த ஆறுபேருக்கும் தற்போது பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர்களில் மூன்று பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற மூன்று பேருக்கு முறையே 16, 12 மற்றும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |