அவுஸ்திரேலிய அரசிடம் இழப்பீடு கேட்டு முறையிட்ட 10,000 மக்கள்: வெளிவரும் பின்னணி
அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இழப்பீடு கேட்டு முறையிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி தொடர்பான விவகாரங்களுக்காக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் தொகை அளவுக்கு அசராங்கம் திரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 10,000கும் மேற்பட்ட மக்கள் தற்போது இழப்பீடு கேட்டு முறையிட்டுள்ளனர். தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 அவுஸ்திரேலிய டொலர் முதல் இழப்பீடு அளிக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவாகும் என்றே தெரியவந்துள்ளது.
36.8 மில்லியன் டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்ட நிலையில், 79,000 பேர்கள் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். பைசர் தடுப்பூசியால் 288 பேர்களுக்கு இருதயம் தொடர்பான நோய் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் 160 பேர்களுக்கு இரத்தம் உறைதல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 65 வயதுக்கும் மேற்பட்டவர் 9 பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் மரணமடைந்துள்ளனர்.