உலகமே அன்னாந்து பார்க்கும் ஒரு நாட்டில் உணவுக்காக நீண்ட வரிசையில் நின்ற மக்கள்: உதுவுவதற்கு மக்கள் எடுத்த முடிவு
சுவிட்சர்லாந்தில், பல்வேறு முக்கிய விடயங்களை முடிவு செய்வதற்காக நேற்று வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிய தடை, குற்றவாளிகளின் பின்னணியை வெளியிடுதல் முதலான பல்வேறு விடங்களை முடிவு செய்ய மக்கள் வாக்களித்தார்கள்.
அதில், ஜெனீவாவில் குறைந்த ஊதியம் கொண்ட பணியாளர்களுக்கு கூடுதல் நிதியுதவி அளிப்பது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்றும் அடக்கம்.
வாக்கெடுப்பில், குறைந்த ஊதியம் கொண்ட பணியாளர்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்குவதற்கு ஆதரவாக, சுமார் 69 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளனர். அதன்படி, மாகாணத்திலிருந்து வேறு எந்த உதவியும் பெறாத, குறைந்த ஊதியம் கொண்ட பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 4,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இதனால், அரசுக்கு 15 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெனீவாவில் மக்கள் உணவுப்பொட்டலங்களுக்காக நீண்ட வரிசைகளில் நிற்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.
உலகமே அன்னாந்து பார்க்கும் செல்வச் செழிப்பு மிக்க நாடான சுவிட்சர்லாந்தில், மக்கள் உணவுக்காக கால் கடுக்க நீண்ட வரிசைகளில் நிற்கும் காட்சிகள், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை மறக்க இயலாது.