சுவிஸ் நகரம் ஒன்றில் வீசும் துர்நாற்றத்தால் அவதியுறும் மக்கள்... காரணம் இதுதான்
சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்கள், கடும் துர்நாற்றத்தால் அவதியுறுவதாக புகார் கூறுகிறார்கள். St. Gallen நகரிலுள்ள Burgweiher என்ற பகுதியில் வாழும் மக்களுக்குத்தான் இந்த பிரச்சினை.
கொரோனா தடை காரணமாக அலுவலகத்திற்கு செல்லமுடியாமல் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் ஒருவர், நாள் முழுவதும் வீட்டிலிருந்தபடியே இந்த நாற்றத்துடன் வேலை செய்யவேண்டியிருக்கிறது என்கிறார்.
அந்த துர்நாற்றத்திற்கு காரணம், அந்த பகுதியிலுள்ள வயல்களிலும் புல் வெளியிலும் உரமிடப்படுவதுதான். சுவிட்சர்லாந்தில், சில பருவகாலங்களில் திட உரமும், சில பருவகாலங்களில் திரவ உரமும் பயன்படுத்தப்படுவதுண்டு.
இப்போது திரவ உரம் பயன்படுத்தப்படுவதால், அதிலிருந்து நீண்ட நேரம் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
அத்துடன், இத்தனை ஆண்டுகளும் மக்கள் வேலை காரணமாக வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்துகொண்டிருந்ததால் இந்த நாற்றத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இப்போது, பெரும்பாலானோர் கொரோனா விதிகள் காரணமாக வீடுகளுக்குள் அடைந்து கிடப்பதால், இந்த ஆண்டு அந்த நாற்றம் பெரிதாக தெரிகிறது
ஆனால், இந்த நிலத்தில் உரமிடப்படவேண்டும், அப்போதுதான் எனக்கு அது பலன் கொடுக்கும் என்கிறார் சம்பந்தப்பட்ட விவசாயி.
ஒரு மழைவந்தால் இந்த நாற்றம் காணாமல் போய்விடும் என்று கூறும் அவர், அத்துடன், ஆண்டுக்கு ஒரு முறைதானே உரம் போடுகிறோம் என்கிறார்!