கையை சொடுக்கினால் தட்டில் சாப்பாடு வந்துவிடும் என மக்கள் நினைக்கிறார்கள்: சுவிஸ் நிதி அமைச்சர்
கையை சொடுக்கினால் தட்டில் சாப்பாடு வந்துவிடும் என மக்கள் நினைக்கிறார்கள்... அந்த எண்ணத்தை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார் சுவிஸ் நிதி அமைச்சர்.
சுற்றிலும் கவனிக்கும்போது, நம்மிடம் ஏராளம் பணம் இருக்கிறது என மக்கள் நினைக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது என்று கூறும் சுவிஸ் நிதி அமைச்சரான Ueli Maurer, அந்த மன நிலை மாறவேண்டும் என்கிறார்.
அந்தக் காலகட்டம் முடிந்துபோனது என்று கூறும் Maurer, இனி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்போகிறோம் என்கிறார்.
2022 ஜூன் மாதத்தின்போது சுவிஸ் நாடாளுமன்றம் இராணுவம், மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழலுக்காக பெருந்தொகை ஒதுக்க சம்மதித்தது. ஆனால், அதே நிலை நீடிக்காது என்கிறார் Maurer.
அதாவது, சுவிட்சர்லாந்தில் பொதுமக்களுக்காக அதிக அளவில் நிதி உதவிகள் செய்யப்படுவதாகவும், அதனால் நம்மிடம் ஏராளம் பணம் இருக்கிறது என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது என தாம் கருதுவதாகவும் தெரிவிக்கும் Maurer ஆகவே, அந்த நிதி உதவிகள் எதிர்காலத்தில் குறைக்கப்படலாம் என மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.