அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க இயலாமல் தவிக்கும் மக்கள்: தீவுகளில் வாழ்வோரின் நிலைமை
விலைவாசி உயர்வால் பெரிய நாடுகளே அவதியுற்றுவரும் நிலையில், பிரித்தானியாவின் பொறுப்பிலிருக்கும் சேனல் தீவுகள் என்னும் தீவுகளில் வாழும் மக்களின் நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுகளின் முடிவுகள் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
தீவுகளில் வாழ்வோரின் நிலைமை
பிரித்தானியாவின் பொறுப்பிலிருக்கும் சேனல் தீவுகள் என்னும் தீவுகளில் வாழும் மக்கள், விலைவாசி உயர்வால், அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க இயலாமல் தவிக்கும் நிலை காணப்படுவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
அந்த தீவுகளில், Jersey, Guernsey, Isle of Man மற்றும் Gibraltar ஆகிய தீவுகளில் வாழும் மக்களிடையே, Island Global Research (IGR) என்னும் அமைப்பு ஆய்வொன்றை மேற்கொண்டது.
ஆய்வு முடிவுகளில், சில தீவுகளில் வாழ்வோரில் 80 சதவிகித மக்கள் விலைவாசியால் அவதியுற்று வருவது தெரியவந்துள்ளது.
Getty Images
Jersey தீவில் வாழும் மக்களில் ஆய்வில் பங்கேற்றவர்களில் 49 சதவிகிதம் மக்கள், கடந்த 12 மாதங்களாக, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதே கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
Jersey தீவில் வாழும் மக்களில் 88 சதவிகிதம் பேரும் Guernsey தீவில் வாழ்வோரில் 86 சதவிகிதம் மக்களும், அதிகரித்துவரும் விலைவாசி தங்கள் குடும்பங்களை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது, நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Jersey தீவில் வாழ்வோரில், ஆய்வில் பங்கேற்றவர்களில் 13 சதவிகிதத்தினர், திடீரென ஒரு தவிர்க்கமுடியாத ஒரு செலவு வந்தால், அது 100 பவுண்டுகள் செலவு வைக்கும் விடயமானால் கூட, அதைக்கூட தங்களால் சமாளிக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்கள்.
அத்துடன், ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், விலைவாசி உயர்வு காரணமாக, எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்பு ஏற்படுமோ என்பது குறித்து பயங்கர கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |