மக்கள் மீண்டும் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள்: பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை!
கொரோனா வைரஸால் மக்கள் ஓவ்வொரு 2 முதல் 4 ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் என்பது அழியாமல் மீண்டும் மீண்டும் பல விகாரங்களாக உருமாற்றம் அடைந்துகொண்டே போகும் என்பதால் ஏற்கெனெவே பாதிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மற்றோரு வைரஸால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
East Anglia பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் Paul Hunter, எதிர்கால விகாரங்கள் வெளிப்படுவது இயல்பானது என்று கூறியுள்ளார்.
ஆனால், அவை நிச்சயமாக கடுமையான நோயை ஏற்படுத்தும் என்று அர்த்தமில்லை.
இருப்பினும், ஒவ்வொரு உருமாறிய வைரஸும் என்ன செய்யும் என்று நம்மால் ஒருபோது கண்டுபிடிக்க முடியாது என்பதால், அதனை கணிப்பது மிகவும் கடினம் என்று கூறுகிறார்.
பேராசிரியர் Hunter இனி உருமாறும் புதிய வகைகள் கவலைக்குரியவை அல்ல என்று வலியுறுத்தினார், ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் என்கிறார்.
இப்போது இருக்கும் தடுப்பூசிகள், தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் பல உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக மிகக் குறைந்த பலனையே அளிப்பதாக அரசாங்க நிபுணர்களே கண்டுபிடித்துள்ளனர்.
அதனால், வைரஸ் உருமாற்றம் அடைவதைப் போல, அதற்கேற்ப தடுப்பூசிகளையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் என கூறினார்.

