இவர்களெல்லாம் இந்த கொரோனா தடுப்பூசியை போடக்கூடாது! கனடா முக்கிய அறிவிப்பு
capillary leak syndrome பாதிப்பு உள்ளவர்கள் அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று கனடா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்வில் கனடா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அஸ்ட்ராஜெனெகா மற்றும் கோவிஷீல்டு மருத்து லேபிளில், capillary leak syndrome பக்க விளைவுகளாக சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், capillary leak syndrome பாதிப்பு உள்ளவர்கள் அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று எச்சரித்துள்ளது.
capillary leak syndrome சிறிய இரத்த நாளங்களிலிருந்து திரவ கசிவை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக மூட்டு வீக்கம், குறைந்த இரத்த அழுத்தம், இரத்தம் உறைதல் மற்றும் ஒரு முக்கியமான இரத்த புரதத்தின் அளவு குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படும்.
ஜூன் 11 வரை, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து கனடாவில் ஒருவருக்கு capillary leak syndrome பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.