பார்சலில் வந்த வெட்டப்பட்ட விரல்.., பல பட வாய்ப்புகளை தவிர்த்த பிரபல தொகுப்பாளினி
நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல பட வாய்ப்புகளை பெப்சி உமா மறுத்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் தற்போது அவர் கூறியுள்ளார்.
பெப்சி உமா
தொண்ணூறுகளில் சன் டிவியில் ஒளிபரப்பான ''பெப்சி உங்கள் சாய்ஸ்'' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பெப்சி உமா.
15 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமாகி வந்தவர் ஒருகட்டத்தில் தொலைக்காட்சியை விட்டு முழுவதுமாக விலகினார்.
இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவர் தான் தொலைக்காட்சியை விட்டு விலக காரணம் என்ன என்பதை பற்றி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது..
“நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காலக்கட்டத்தில் எனக்கு மூட்டை மூட்டியாக காதல் கடிதங்கள் வரும். அதைப் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கும்.
அதீத அன்பின் காரணமாக மதுரையில் இருந்த ரசிகர் ஒருவர் தன் சுண்டு விரலை வெட்டி எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
அதேபோல, நடிகர் ரஜினிகாந்து, சல்மான்கான், ஷாருக்கான், பாரதிராஜா, கே.பாலசந்தர் போன்ற ஜாம்பவான்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் நான் நடிக்கத் தயாராக இல்லை. நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்ததே அதற்குக் காரணம்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது எனக்கு ஒரு கட்டத்தில் என் உடல் நிலை சரியில்லாததால் எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. அதனால், விலகினேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இப்போது என் சொந்த பிசினஸ் செய்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |