Job: மாதம் ரூ. 50,000 சம்பளம்.., தமிழக அரசில் வேலைவாய்ப்பு: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் LADCS ஆனது காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்
Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel, Office Assistant/Clerk,Office Peon பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / டிகிரி / BL / Law என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.12,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 11.09.2024ஆம் திகதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |