நடிகர் சத்யராஜுடன் சேர்ந்து பறை இசைக்கு நடனமாடிய பேரறிவாளன்! வைரலாகும் வீடியோ
அற்புதம்மாள் தாயார் பிறந்தநாள் விழாவில் பேரறிவாளனுடன் நடிகர் சத்யராஜ் நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஜோலார்பேட்டையில் அமைந்து இருக்கும் தனியார் திருமண வளாகத்தில் குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் பேரறிவாளன் தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே மேடையில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு கேக் வெட்டி ஊட்டிக் கொண்டனர். இந்த பிறந்தநாள் விழாவில் அலங்காநல்லூர் சமர் பறை இசை குழுவினரின் இசை முழக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.
குயில் 80 அற்புதம் 75 கொண்டாட்டம் ...
— Thandhai Periyar DK தபெதிக (@TPDK2020) July 30, 2022
பேரறிவாளனுடன்
புரட்சி நடிகர் சத்யராஜ் நடனம் pic.twitter.com/xEGK6KdOT0
இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேரறிவாளனும் திரைப்பட நடிகர் சத்யராஜும் மேடையில் நடனமாடிய நிகழ்ச்சி அனைவரையும் ஈர்த்தது.
பறை இசைக்கு இருவருக்கு சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        