மாதவிடாய் திகதி அட்டையை வீட்டு கதவில் தொங்க விடும் பெண்கள்! காரணம் இதுதான்
உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள வீடுகளின் கதவுகளில் மாதவிடாய் திகதி அட்டையை பெண்கள் தொங்கவிட்டுள்ளனர்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எரிச்சல், பலவீனம் மற்றும் பல பிரச்னைகள் இருக்கும். இந்த அட்டவணையை வீட்டிற்குள் வைத்தால் குடும்பத்தார் தங்களை நன்றாக கவனித்து கொள்வதாக பல பெண்கள் கூறுகின்றனர்.
ஆலிமா என்ற பெண் கூறுகையில், என் வீட்டில் அண்ணன், தங்கை, அப்பா என மொத்தம் ஏழு பேர் இருக்கின்றனர். என் மாதவிடாய் திகதி அனைவரும் தெரிகிறது. மாதவிடாய் அட்டவணையை ஒட்டியபிறகு குறைந்த பட்சம் வீட்டில் உள்ள அனைவருக்கும் என் மாதவிடாய் தேதி தெரிவதால், அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.
Newstrack
இது மிகவும் வசதியானதாகவும், இனிமையாகவும் உள்ளது என்றார். 'செல்ஃபி வித் டாட்டர் அறக்கட்டளை மூலம் இது குறித்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதன் இயக்குனர் சுனில் ஜக்லான் கூறுகையில், மீரட்டில் பீரியட் அட்டவணையின் பிரசாரம், 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் தொடர்பு கொண்டு மாணவிகளிடம் உரையாடல் நடத்தப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வு இன்னும் அதிகமாகும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
SHAHBAZ ANWAR/BBC