பெரியார் குறித்து சர்ச்சை கருத்து.., சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான் மீது வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமான் மீது காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகிறது
திராவிடர் கழக மாவட்ட தலைவர் தண்டபாணி வடலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "பெரியார் குறித்து சீமான் தவறான தகவல்களை பரப்பியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அவர் மீது வடலூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்தவகையில், தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |