பெரியார் குறித்த சர்ச்சை கருத்து.., சீமானுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி கண்டனம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சீமான் மீது காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இறந்த பெருந்தலைவரை பற்றி அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் வாழ்ந்த காலத்தில் பல நன்மைகளை மக்களுக்கு செய்துள்ளார். அந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரியாரால் ஏற்றம் பெற்றனர். அதை எல்லாம் நாம் மறக்க முடியாது. பெரியாரை அவதூறாக யாராக பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |