முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை நிரந்தரமாக நீக்க!
பெண்களின் முகம் முடிகளின்றி மிருதுவாக இருக்கும், ஆனால் சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
இதற்கு காரணம் ஹார்மோன்களே.இந்த ஹார்மோன்களால் சில பெண்களுக்கு மீசையும் தடியும் தெரிவதோடு, நெற்றியில் முடிகள் அதிகளவில் இருக்கும்.
இந்த முடிகளை நீக்க சில பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று முடிகளை நீக்குவார்கள். ஆனால் அழகு நிலையத்திற்கு சென்று முடிகளை நீக்கினாலும் அந்த இடத்தில திரும்ப முடி வளரும்.
முகத்திலிருக்கு முடி நிரந்தரமாக நீங்க இயற்கை முறையில் வீட்டிலேயே ஒரு பேஷ்பேக் தயாரிக்கலாம். இதை தினமும் பயன்படுத்தி வர விரைவில் முகத்திலிருக்கும் முடி நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- கஸ்தூரி மஞ்சள்-2 டீஸ்பூன்
- கடுக்காய் போடி-2 டீஸ்பூன்
- கடலை மாவு-1 டீஸ்பூன்
- தேன்-2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் கஸ்தூரி மஞ்சள் 2 டீஸ்பூன் போட்டு பின் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் போடி 2 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும் .
அதன்பின் வீட்டில் உபயோகிக்கும் கடலை மாவு ஒரு டீஸ்பூன் , தேன் 2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இந்த பேக்கை உங்கள் முகத்தில் புருவம்,கண்ணிமை போன்ற இடங்களில் படாமல் மற்ற இடங்களில் போட்டு 10-15 நிமிடம் கழித்து சுடுதண்ணீரில் காட்டன் துணியை நனைத்து முகத்தை சுத்தம் செய்துகொள்ளலாம். இதை தொடர்ந்து செய்துவர முகத்திலிருக்கும் முடி நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |