கனடாவில் நிரந்தர வதிவிட அனுமதி கோரும் அந்த மக்களுக்கு புதிய சலுகை: நிபந்தனைகளும் அறிவிப்பு
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் கனடாவில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் உக்ரேனிய மக்களுக்கு நிரந்தர வதிவிட அனுமதி அளிக்கும் வகையில் புதிய நிபந்தனையை அறிவித்துள்ளது கனேடிய நிர்வாகம்.
நிரந்தர வதிவிட அனுமதி
கனடாவில் தற்போது தற்காலிக வதிவிட அனுமதி பெற்றுள்ள உக்ரேனிய மக்கள் எதிர்வரும் அக்டோபர் 23ம் திகதி முதல் எவ்வித கட்டணமும் இன்றி நிரந்தர வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
@CP
இது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுக்கு நீண்ட கால ஆதரவை அளிக்கும் திட்டத்தின் ஒருபகுதி என்றே கூறுகின்றனர். இந்த திட்டத்தில் தகுதி பெற, ஒருவர் கண்டிப்பாக தற்காலிக வதிவிட அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் ஒருவர் அல்லது அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் கனடாவில் குடியுரிமை பெற்றிருக்கவோ அல்லது நிரந்தர வதிவிட அனுமதியோ பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து போரினால் பாதிக்கப்பட்டு வெளியேறும் மக்களுக்கு என தற்காலிக அவசர விசாக்களுக்கான விண்ணப்பங்களை இனி விநியோகிப்பதில்லை என சனிக்கிழமை அரசாங்கம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக அடைக்கலம்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமுலுக்கு கொண்டுவந்த குறித்த திட்டத்தின் அடிப்படையில், சுமார் 166,000 உக்ரேனிய மக்களுக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாவினால், உக்ரேனிய மக்கள் கனடாவில் பணியாற்ற முடியும் என்பதுடன், கல்வியையும் தொடரலாம்.
@getty
அத்துடன் மொழிப்பயிற்சிகளை முன்னெடுக்கவும், மூன்றாண்டு காலம் தொழில் சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். CUAET எனப்படும் அந்த விசா பெற்றுள்ள உக்ரேனிய மக்கள் 2024 மார்ச் 31 வரையில் நீட்டித்துக் கொள்ளலாம், அல்லது நிரந்தர வதிவிட அனுமதியும் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
ஆனால் இந்த சலுகையானது 2024 அக்டோபர் 22 வரையான ஓராண்டுக்கு காலம் மட்டும் அமுலில் இருக்கும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |