பிரித்தானியாவில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி: எப்போது முதல் தெரியுமா?
பிரித்தானியாவில் ஏப்ரல் 12 முதல் குடும்பத்தினர் உள்ளிட்ட 15 விருந்தினர்களுடன் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
மட்டுமின்றி திருமணத்திற்கு பிந்தைய வரவேற்பு நிகழ்ச்சிகளும் அனுமதிக்கப்பட உள்ளது. பிரித்தானியாவில் சுமார் 7,000 திருமணங்கள் ரத்து செய்யப்படும் சூழல் உருவான காரணத்தாலையே, அமைச்சர்கள் தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 12 முதல் 15 பேர் வரை கலந்துகொள்ளும் திருமண கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று இந்த மாத தொடக்கத்தில் கூறப்பட்டது.
ஆனால் அந்த கொண்டாட்டங்கள் கண்டிப்பாக, தேவாலயங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. ஹொட்டல்கள் உள்ளிட்ட பிற பகுதிகள் மே 17 வரை மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டது.
தற்போது வெளியான அறிவிப்பில், 15 விருந்தினர்களுடன் ஹொட்டல்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 12-கு முன்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சிகள் கண்டிப்பாக தனிப்பட்ட முறையில் முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.