தேம்ஸ் நதிக்கரையில் புதையல் தேடும் கூட்டம்: அரசு எடுத்துள்ள நடவடிக்கை
Searching the banks of the Thames for relics from the past is attracting a growing number of history enthusiasts: தேம்ஸ் நதிக்கரையில் பழங்காலப் பொருட்களைத் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் பழங்காலப் பொருட்களைத் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
சேற்றுத் தேடல்
'சேற்றுத் தேடல்' அல்லது ’mudlarking’ என்னும் இந்த விடயம், ஒரு காலத்தில் வறுமையுடன் தொடர்புடையதாக இருந்தது. அதாவது, நதியோரம் கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்திவந்துள்ளனர் ஏழை மக்கள்.
இந்நிலையில், தேம்ஸ் நதிக்கரையில் கடந்த காலப் பொருட்களைத் தேடும் வரலாற்று ஆர்வலர்கள் எண்ணிக்கை, சமீப காலமாக கணிசமாக அதிகரித்து வருகிறது.

ரோமானிய காலத்து மட்பாண்டங்கள் முதல் பல நூற்றாண்டுகள் பழமையான காலணிகள் வரை, நகரத்தின் கடந்த காலப் பொருட்களைக் கண்டறிய ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் தேம்ஸ் நதிக்கரையில் குவிகிறார்கள்.
அப்படி கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அவற்றைக் காணவும் ஏராளமானோர் குவிகின்றனர்.
விடயம் என்னவென்றால், உரிமம் இல்லாமல் தேம்ஸ் நதிக்கரையில் கடந்த காலப் பொருட்களைத் தேடுவது, இப்போது சட்டவிரோதமாகும்.
அத்துடன், இப்படி கடந்த காலப் பொருட்களைத் தேடுவது சமீப காலமாக அதிகரித்து வருவதால், அதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள அதிகாரிகள், தேம்ஸ் நதிக்கரையில் கடந்த காலப் பொருட்களைத் தேட முறைப்படி அனுமதி பெறவேண்டும் என அறிவித்துள்ளார்கள்.

அப்படி அனுமதி பெறக் காத்திருப்போர் பட்டியல், 10,000ஐத் தொட்டுவிட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. சிலர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் அனுமதி பெறக் காத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
உண்மையாகவே, தொல்பொருள் ஆய்வில் ஈடுபட காத்திருப்போர், முன்பு தேம்ஸ் நதிக்கரையில் ஆய்வு நடத்திய ஆர்வலர்களும் வரலாற்றாசிரியர்களும், இந்தக் கட்டுப்பாடுகளால் தங்கள் ஆய்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தக் கண்டுபிடிப்புகள் கடந்த கால அன்றாட வாழ்க்கை குறித்த தனித்துவமான பார்வைகளை வழங்குகின்றன என்பதால், கட்டுப்பாடுகள் அவசியம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் சிலர்.
அதேபோல, பிரித்தானியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றை, எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க இந்தக் கட்டுப்பாடுகள் அவசியம் என அதிகாரிகளும் கூறுகிறார்கள்.