25 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தபிறகு இன்று நாடுகடத்தப்படும் நபர்: பிள்ளைகளை பிரிவதால் சோகம்
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் 25 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில், இன்று அவர் நாடுகடத்தப்பட உள்ளதையடுத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
Mohammad Mahfuz Alam என்னும் அந்த நபர், 1996ஆம் ஆண்டு பங்களாதேஷிலிருந்து தப்பி கனடாவில் அரசியல் புகலிடம் கோரினார். ஆனால், அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
தன் மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து அவர் கனடா வந்த நிலையில், ஒரு நாள் அவர்களையும் கனடாவுக்கு அழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவந்தார் Mohammad Alam.
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து, பங்களாதேஷிலிருக்கும் தன் பிள்ளைகளின் படிப்புக்கு பணம் அனுப்பி அவர்களை நன்றாக படிக்க வைத்த அவர், என்றாவது ஒரு நாள் தன் குடும்பத்தினரும் தன்னுடன் கனடாவுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், ரொரன்றோவில் அவர்களுக்காக சிறிய வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார்.
பல்கலைப் பட்டதாரியான அவரது மகன் Shahed, 2015இல் திறன்மிகு புலம்பெயர்ந்தோராக கனடாவுக்கு வந்து தந்தையுடன் சேர்ந்துகொண்டார்.
ஆனால், தன் பிள்ளையின் பிள்ளைகள் வளர்வதைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாழத் துவங்கிய நிலையில், Mohammad Alam இன்று நாடுகடத்தப்பட உள்ளார்!
மகனையும் பேரப்பிள்ளைகளையும் பிரிய இருப்பதால் Mohammad Alam கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அவருடைய உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர் வரி செலுத்திவந்ததன் மூலம் கனேடிய பொருளாதாரத்துக்குத் தன் பங்கை அளித்திருக்கிறார், அவருக்கு எந்த குற்றப்பின்னணியும் இல்லை, அவர் அரசு உதவியும் பெறவில்லை, அவர் இங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறார், தன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் உதவி வருகிறார்.
அப்படியிருக்கும்போது, அவர் கனடாவில் வாழ்வதற்கு அவருக்கு என்ன தகுதி இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார் Mohammad Alamஉடைய சட்டத்தரணி!
Images : Toronto Star