திடீரென உயிரிழந்த நபர்... மாயமான குழந்தை: பொலிசார் தெரிவித்துள்ள தகவல்
கனடாவின் ரொரன்றோவில் ஐந்து நாட்களாக காணாமல் போயிருந்த நான்கு வயது குழந்தை கிடைத்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
திடீரென உயிரிழந்த நபர்... மாயமான குழந்தை
மார்க்கம் சாலை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த நபர் ஒருவருடன், ஒரு நான்கு வயது குழந்தையும் வாழ்ந்துவந்துள்ளது.
திங்கட்கிழமை மதியம் பொலிசார் அந்த வீட்டுக்கு அழைக்கப்பட்டார்கள். அப்போது, அந்த நபர் இறந்துகிடப்பதை பொலிசார் கண்டுள்ளார்கள். ஆனால், அவருடன் இருந்த அந்த குழந்தையை வீட்டில் காணவில்லை.
குழந்தையை யாராவது கடத்தியிருக்கலாம் என கருதிய பொலிசார் அவளைக் கண்டுபிடிப்பதற்காக ஆம்பர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பொலிசார் தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், தற்போது, அந்தக் குழந்தை கிடைத்துவிட்டதாகவும், அவள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, உயிரிழந்த அந்த நபர், உயிரிழக்கும் முன், தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதையடுத்து, அந்தக் குழந்தையை பத்திரமாக வேறொரு குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளார்.
குழந்தை கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து, அவள் தொடர்பில் விடுக்கப்பட்டிருந்த ஆம்பர் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |