கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற நபர்... இந்தியா வந்தபோது நடந்த பயங்கரம்
கனடாவிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவர் மற்றொருவருடனான சண்டையில் பரிதாபமாக பலியானார்.
வேண்டுதலை நிறைவேற்ற வந்த நபர்
பஞ்சாபிலுள்ள Gurdaspur என்ற இடத்தைச் சேர்ந்த பர்தீப் சிங் (24) என்பவர், 2016ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்று அங்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்று வாழ்ந்துவந்துள்ளார்.
தற்போது வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இந்தியா திரும்பியுள்ளார் அவர்.
Rupnagar என்ற இடத்தில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பர்தீப் சிங் சென்றிருந்த நிலையில், அவருக்கும் நிரஞ்சன் சிங் என்பவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் கைகலப்பாக மாற, படுகாயமடைந்த பர்தீப் சிங் உயிரிழந்துள்ளார். எதற்காக இந்த சண்டை துவங்கியது என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
நிரஞ்சனுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அவரைக் கைது செய்வதற்காக பொலிசார் மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள்.
கனடா சென்று நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும் பெற்ற ஒருவர் கைகலப்பில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Very Sad News; A Nihang Singh who came from Canada, succumbed to death in the Hola Mahalla at Anandpur Sahib. When Pradeep Singh asked some guys to behave properly & not to create ruckus they beat him to death. pic.twitter.com/zZgg5Etl2j
— Gagandeep Singh (@Gagan4344) March 7, 2023