லண்டனில் குற்றச்செயல் குறித்து தகவலளித்த நபரையே கைது செய்த பொலிசார்: நீதிபதி கண்டனம்
லண்டனில், கடை ஒன்றில் தகராறு செய்துகொண்டிருந்த ஒரு நபர் குறித்து பொலிசாருக்கு தகவலளித்தார் அவ்வழியே சென்ற ஒருவர். ஆனால், சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் புகாரளித்தவரையே தாக்கி கைது செய்தார்கள்.
தகராறு செய்துகொண்டிருந்த ஒரு நபர்
கிழக்கு லண்டனில் கடை ஒன்றில் தகராறு செய்துகொண்டிருந்தார் ஒருவர். கடையிலுள்ள பொருட்களை சேதப்படுத்தியதுடன், கொலை செய்டுவிடுவதாக மிரட்டலும் விடுத்துக்கொண்டிருந்தார் அவர்.
நடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்த Rasike Attanayake என்பவர், உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், தகராறு செய்த நபருக்கு பதிலாக, புகாரளித்த Attanayakeவையே கைது செய்தார்கள்.
Jonathan Marsh (33) என்னும் பொலிசார், அவரைக் கீழே தள்ளி, அவருக்கு கைவிலங்கும் மாட்டி, அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளார். இந்த சம்பவம் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றுள்ளது.
நீதிபதி கண்டனம்
தனக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளக்கூட Attanayakeவுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் நீதிபதி.
இந்த வழக்கில் தற்போது அந்த பொலிசார் தரப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாக நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. Attanayake கைது செய்யப்படும் காட்சிகளைக் கண்ட நீதிபதியாகிய Amanda Pilling என்பவர், Attanayakeவைக் கைது செய்யும்போது தேவையில்லாமல் Jonathan வன்முறையைப் பிரயோகித்ததாகவும், அவரது செயல்கள் தேவையற்றவை, நியாயப்படுத்த முடியாதவை என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |