கிராண்ட் கேன்யன் வெள்ளப்பெருக்கு... காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்
Desperate search for person missing in Grand Canyon: கிராண்ட் கேன்யனில் காணாமல் போன நபரைத் தேடும் பணி தீவிரம்.
கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், 80 மலையேற்ற வீரர்களும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ரம்மியமான பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், கொலராடோ நதிக்கு அருகிலுள்ள பாதைகளில் இருந்து மலையேறுபவர்களும், சுற்றுலா செல்பவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களைக் கண்டறியவும், தேடுதல் குழுவினர் இரவு நேரப் பார்வைக் கண்ணாடிகள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தியதாக, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சம்பவ இடக் கட்டளை அதிகாரி டேவ் பிளாக் தெரிவித்தார்.
சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குள் 45 பேர் மீட்கப்பட்டனர்; ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 37 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அதேவேளையில், காணாமல் போன 15 மலையேற்ற வீரர்களைத் தேடும் பணியை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர். திங்கட்கிழமை முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்த நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய பூங்காவின் அனுமதி முறையைப் பார்வையிட்டும், வாகனங்களின் பதிவு எண்களைச் சரிபார்த்தும் பூங்காப் பாதுகாவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இருப்பினும், திடீர் வெள்ளப்பெருக்கு பள்ளத்தாக்கிற்குள் செல்லும் ஒரேயொரு நீர்க் குழாயை கடுமையாக சேதப்படுத்தியதால் ஆபத்துகள் நீடித்தன, மேலும் இரவு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவிற்குள் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹொட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அதிகாரிகள் தற்போது தடை விதித்துள்ளனர்.
மேலும், ஆண்டு முழுவதும் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அவசரகால நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

கிராண்ட் கேன்யனின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு மலையேற்றம் செய்பவர்கள் இரவில் தங்கும் பிரபலமான விடுதிகள் மற்றும் முகாம் பகுதிகளைச் சுற்றி, கொலராடோ நதி பாயும் இடத்திற்கு அருகே பள்ளத்தாக்கின் ஆழத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செங்குத்தான சரிவுள்ள பாறைப் பகுதியில், வெறும் அரை மணி நேரத்திற்குள் சுமார் அரை முதல் ஒரு அங்குலம் வரை மழை பெய்துள்ளது. கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் நிலப்பரப்பைச் சிதைத்துக்கொண்டு செல்வதை, மேலே இருந்த தொங்கு பாலத்திலிருந்து மலையேற்றப் பயணிகள் படம்பிடித்த காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருந்தன.
பழுப்பு நிற நீரில் பெரிய குப்பைக் குவியல்களும் மிதந்து கொண்டிருந்தன. பின்னர், அப்பகுதியிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |