உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்யும் மற்றொரு நபர்: 130 பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்...
கனேடியர் ஒருவர் ஒன்லைனில் விஷம் விற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், உக்ரைன் நாட்டவர் ஒருவரும் இணையம் வாயிலாக நச்சு ரயானம் ஒன்றை விற்றுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்த கனேடியர்
ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (57)என்னும் கனேடியர், இணையதளம் வாயிலாக உயிரைப் பறிக்கும் ரசாயனம் ஒன்றை விற்பனை செய்துவந்துள்ளார்.
Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1,200 பாக்கெட் விஷம் அனுப்பியுள்ளார். நியூசிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்கள்.
FACEBOOK
Kenneth Lawக்கு, 117 மரணங்களுடன் தொடர்புள்ளதாக பொலிசார் கருதும் நிலையில், அவரிடம் நஞ்சு வாங்கி உட்கொண்டு உயிரிழந்தவர்களில் 88 பேர் பிரித்தானியர்கள் என தெரியவந்துள்ளது. பலருடைய தற்கொலைக்கு உதவியதாக, மே மாதம் கைது செய்யப்பட்டார் Kenneth Law.
உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்யும் மற்றொரு நபர்
இந்நிலையில், Leonid Zakutenko என்னும் உக்ரைன் நாட்டவர் ஒருவரும், Kenneth Law விற்பனை செய்த அதே நச்சு ரசாயனத்தை இணையம் வாயிலாக விற்பனை செய்துவருவது தற்போது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய ஊடகவியலாளர்கள் சிலர், உக்ரைன் தலைநகர் கீவ்விலுள்ள அவரது வீட்டின் அருகே அவரை மடக்கி கேள்வி எழுப்பியபோது, தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார் அவர்.
ஆனால், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது, Leonid, 2019 முதல் அந்த ரசாயனத்தை விற்பனை செய்துவந்திருக்கலாம் என்னும் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளும் லண்டன் பல்கலை ஒன்றின் பேராசிரியரான அம்ரிதா (Prof Amrita Ahluwalia) என்பவர், Leonid விற்பனை செய்யும் ரசாயனத்தை உட்கொண்டு, 130க்கும் அதிகமான பிரித்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்னும் அதிரவைக்கும் செய்தியைத் தெரிவித்துள்ளார்.
LEE DURANT
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |