குழந்தைகளுடன் ரயில் தண்டவாளத்தின் நடுவில் நிற்கும் நபர்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காட்சி
பிரித்தானியாவில், லெவல் கிராஸிங் எனப்படும் ஆளில்லா ரயில் பாதை கடக்குமிடங்களில் மக்கள் அஜாக்கிரதையாக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை, அது தொடர்பான பகீர் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளுடன் ரயில் தண்டவாளத்தின் நடுவில் நிற்கும் நபர்
அவற்றில் ஒரு வீடியோ காட்சியில், இரு சிறு குழந்தைகளுடன் ரயில் தண்டவாளத்தின் நடுவில் நிற்கும் ஒருவர், தனது மொபைலை பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. பின் அவர், தொலைவிலுள்ள மலை ஒன்றைத் தன் பிள்ளைகளுக்குக் காட்டிக்கொடுக்கிறார். ஆக, 90 விநாடிகள் அவர்கள் அனைவரும், தங்கள் நாயுடன் அந்த தனடவாளத்துக்கு நடுவே நிற்பதைக் காட்டுகிறது அந்த வீடியோ. இதில், ரயில் வருகிறது, என்று குழந்தைகளில் ஒன்று சொல்வதையும் அந்த வீடியோவில் கேட்கமுடிகிறது.
Sky News
மற்றொரு வீடியோ காட்சியில், ரயில் தண்டவாளத்தில் நடுவே ஒரு இளைஞர் புஷ் அப்ஸ் எடுக்கும் காட்சியும், நாய்களை நடத்தி வரும் ஒருவர் அவற்றை ரயில் தண்டவாளத்தில் நடுவே அமர வைக்க, மற்றொருவர் அவற்றை புகைப்படம் எடுக்கும் காட்சியும் சிக்கியுள்ளன.
இன்னுமொரு காட்சியிலோ, ஸ்கூட்டரில் பயணிக்கும் ஒரு சிறுவன், வேகமாக வரும் ரயிலின் முன்னே ரயில் பாதையைக் கடக்க, ஏழு விநாடிகளில் அந்த ரயில் அந்த இடத்தைக் கடந்து செல்கிறது.
எச்சரிக்கும் ரயில்வே அதிகாரிகள்
இந்த வீடியோவில் காட்டப்பட்டிருப்பது சில காட்சிகள்தான் என்று கூறும் அதிகாரிகள், இதுபோல் 50 காட்சிகளை, ஒன்றில் ரயில் சாரதிகள் பார்த்துள்ளார்கள் அல்லது அவை மறைத்துவைக்கப்பட்டுள்ள கமெராக்களில் சிக்கியுள்ளன என்கிறார்கள்.
Sky News
இது எவ்வளவு ஆபத்து என்பதை மக்கள் உணரமாட்டேன்கிறார்கள் என்று கூறும் அதிகாரிகள், சில விநாடிகளில் உயிருக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
இப்படிச் செய்யவேண்டாம், அது ஆபத்து எவ்வளவோ அறிவுறுத்தியும் மக்கள் கேட்காததால், இப்படி அபாயகரமாக மக்கள் நடந்துகொள்ளும் இடங்களுக்கே சென்று மக்களை எச்சரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |