பேக்கரி மேனேஜர் TO கோடீஸ்வரர்.., திணை மூலம் பிஸ்கட் தயாரித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்
திணை மூலம் குக்கீஸ்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து நபர் ஒருவர் ரூ.1.5 கோடிக்கும் மேல் வருமானம் பெறுகிறார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜோத்பூரைச் சேர்ந்தவர் அமித் சோனி. இவருக்கு 2009ம் ஆண்டில் எம்பிஏ முடித்த பிறகு ஒரு பேக்கரியில் மேனேஜர் வேலை கிடைத்தது.
அந்த பேக்கரியில் பாரம்பரிய அடுப்புகள் பயன்படுத்தியதால் இடிந்து விழும் சூழல் நிலவியது. பின்னர், இதனை சரிசெய்வதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று அமித் சோனியின் உதவியை முதலாளிகள் நாடியுள்ளனர்.
இதற்காக அமித் சோனி,பிரிட்டானியா, பார்லே-ஜி யூனிபிக் போன்ற பிஸ்கட் பிராண்டுகளின் தொழிற்சாலைகளை பார்வையிட சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு பேக்கரி வணிகம் தொடர்பான விவரங்கள் கிடைத்தது.
படிப்பை பாதியில் நிறுத்தி ரூ.20,000 கோடி சாம்ராஜ்ஜியத்திற்கு அதிபதியான ஈரோட்டுக்காரர்.., யார் இந்த தமிழர்?
பின்னர், ஸ்டாக்கிங் செய்வது முதல் மார்க்கெட்டிங் வரை அனைத்து வேலைகளையும் திறம்பட செய்தார். இதையடுத்து அவர் செய்த தொழிற்சாலை, தானியங்கி அமைப்பாக மாறியது.
அப்போது தான் ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் அமித்திற்க்கு வந்தது. பின்னர், தான் பணிபுரிந்த நிறுவனத்திடம் வேலையை கைவிட போகிறேன் என்று அமித் கூறியுள்ளார். பின்னர், அவரை சுமார் 10 மாதங்கள் கழித்து அவரை நிறுவனம் விடுவித்தது.
இதையடுத்து, ஒரு வருடம் பேக்கிங் மற்றும் சமையலை அமித் கற்றுக்கொண்டார். 2017 முதல் 2018-ஆம் ஆண்டு வரை மும்பையின் IHM-மில் பேக்கரி செஃப் கோர்ஸ் மற்றும் ஸ்கில் இந்தியாவில் இருந்து 2 கோர்ஸ்கள் என படித்தார்.
பின்னர், 2018-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் திகதியில் RD'z 1983 என்ற நிறுவனத்தை அமைத்தார். தற்போது, இந்தியா முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஹொட்டல்களுக்கு 6 வகையான திணை மாவை கொண்டு செய்யப்படும் குக்கீஸ்களை விற்பனை செய்து வருகிறார்.
இதனை தவிர பஹ்ரைன் மற்றும் துபாய் நாடுகளுக்கு திணை குக்கீஸ்களை ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த தினை மாவில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளன.
இந்நிலையில், 2024-ஆம் நிதியாண்டில் RD'z நிறுவனம் ரூ.1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதனை அடுத்த நிதியாண்டில் ரூ.1.5 கோடியாக உயர்த்த நிறுவனம் கணித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |