இந்தியாவிலேயே விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கும் நபர் யார் தெரியுமா?
இந்தியா மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யங்களைக் கொண்ட பல பில்லியனர்களைக் கொண்ட நாடு. அவர்கள் பெரிய வீடுகள் மற்றும் பெரிய கார்களை வைத்திருப்பார்கள்.
அந்தவகையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் அதிகமான விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கிறார்.
யார் அந்த நபர்?
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் இந்த கார் உள்ளது. 1979 இல் அவர் தனது தந்தையை இழந்தபோது 13 வயதில் செய்தித்தாள்கள் மற்றும் பால் விநியோகம் செய்யும் வேலையை செய்தார்.
அவர் தனது குடும்பத்தை ஆதரித்துக்கொண்டே தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் அவர் தனது மாமாவிடமிருந்து சலூனை எடுத்து வெற்றிகரமான நடத்தி சென்றார்.
இன்று, அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருகிறார். ஒரு வருடத்தில் வியாபாரம் செழிக்க ஆரம்பித்தது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 400க்கும் மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.
கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானி ஆகியோரை விட இவரிடம் அதிக கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பாபுவின் சொத்து மதிப்பு சுமார் 1200 கோடி ரூபாய். 30 ஆண்டுகளுக்கும் மேலாக விலை உயர்ந்த கார்களை சேகரித்து வருகிறார்.
மேலும் இவரிடம் mini Mercs, Rolls Royce மற்றும் BMW போன்ற கார்களை வைத்துள்ளார்.
இவர் தனக்கென பெங்களூரில் ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற 30 ஆண்டு பழமையான சொகுசு கார் வாடகை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவர் தனது முதல் காரான மாருதி ஆம்னியில் முதலீடு செய்தபோது 1993 இல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
தற்போது இவர் இந்தியாவில் விலையுயர்ந்த அதிக கார்களை வைத்திருக்கும் ஒரு நபராக திகழ்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |