அரசு பள்ளி சமையலறையில் மனிதக் கழிவுகளை பூசிய மர்மநபர்கள்: தகவல் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம்
தமிழக மாவட்டம் சேலத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியின் சமையல் அறையில் மனிதக் கழிவுகளை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் மதுபானம் குடிப்பது வாடிக்கை
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காவேரிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 1950 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நடுநிலை பள்ளியில் மதில் சுவர் இல்லாத காரணத்தினால் விடுமுறை தினங்களில் சமூக விரோதிகள் மற்றும் மது குடிப்பவர்கள் இங்கே வந்து குடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மனிதக் கழிவுகள்
இந்நிலையில், பள்ளிக்கு நேற்று விடுமுறை என்பதால் பள்ளியில் சமையலறை பகுதியில் மனிதக்கழிவை பூசிவிட்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று பள்ளிக்கு சென்ற ஊழியர்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே, இது குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டும் மாலை 3 மணி வரையும் பள்ளிக்கு வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை.
இதன் பிறகு, இது தொடர்பாக ஊடங்களில் செய்தி வெளியான பின்னரே அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மனிதக்கழிவுகளை பூசிய மர்மநபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |