23 பந்தில் 50 ரன் விளாசிய வீரர்! பரபரப்பான ஆட்டத்தில்..15 ஓவரிலேயே இலக்கை எட்டிய அணி
பிக்பாஷ் லீக் போட்டியில் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை பந்தாடியது.
டாக்கெட், போய்ஸ் கூட்டணி அதிரடி
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த பிக்பாஷ் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் டி ஆர்க்கி ஷார்ட் 22 ஓட்டங்களும், அலெக்ஸ் ரோஸ் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனதால், அடிலெய்டு அணி 58 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் என தடுமாறியது.
Can you believe that!
— KFC Big Bash League (@BBL) December 31, 2024
The @StrikersBBL have gone from 8-58 to 8-142.
A record-breaking 84-run partnership off 60 balls for the ninth wicket has brought the crowd alive.
Take a bow, Brendan Doggett & Cameron Boyce! #BBL14 pic.twitter.com/qB28eUHwL1
அப்போது கைகோர்த்த பிரெண்டன் டாக்கெட், கேமரூன் போய்ஸ் கூட்டணி அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதன்மூலம் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 142 ஓட்டங்கள் எடுத்தது. பிரெண்டன் டாக்கெட் (Brendon Doggett) 39 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார்.
கேமரூன் போய்ஸ் (Cameron Boyce) 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்தார். ஜ்ஹய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரென்டொர்ஃப் மற்றும் லன்ஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஃபின் ஆலன் ருத்ர தாண்டவம்
அடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியில் மேத்யூ ஹர்ஸ்ட் (3), ஹார்டி (2) விரைவில் வெளியேற ஃபின் ஆலன் ருத்ர தாண்டவம் ஆடினார்.
இதன்மூலம் ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. ஃபின் ஆலன் (Finn Allen) 23 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
Fireworks in the sky 🎆
— KFC Big Bash League (@BBL) December 31, 2024
Fireworks by Finn Allen!@BKTtires #GoldenMoment #BBL14 pic.twitter.com/BR2uqYVlnC
பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கூப்பர் கொனோலி, ஆஷ்டன் டர்னர் 15வது ஓவரிலியே அணியை வெற்றி பெற வைத்தனர். பெர்த் அணி 14.3 ஓவரில் 146 ஓட்டங்கள் எடுத்தது.
கூப்பர் கொனோலி (Cooper Connolly) ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும், ஆஷ்டன் டர்னர் (Ashton Turner) 18 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களும் விளாசினர்.
Super Scorchers!
— KFC Big Bash League (@BBL) December 31, 2024
The visitors with a thumping win on New Year's Eve at Adelaide Oval. #BBL14 pic.twitter.com/p2IBMi0MLp
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |